தீர்ப்பாய உத்தரவுகளை அமல்படுத்துவதில் தாமதம்: சட்ட ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

 


நடுவர் தீர்ப்புகளின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய தொகையை வசூலிக்க நீண்டகாலம் வழக்காட வேண்டிய நிலை குறித்து உச்சநீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

நடுவர் தீர்ப்புகளை விரைவாக அமல்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்குமாறு இந்திய சட்ட ஆணையத்தை அக்டோபர் 28 அன்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. நடுவர் தீர்ப்பு கிடைத்த பிறகும் அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதமே இந்த விவகாரத்தின் மையம்.

கருத்துகள்